அசுர வேகத்தில் பரவும் ஒமைக்ரான்! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!

உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் நோய்களால் சூழப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றி மிக வீரியத்தோடு வேகமாக பரவி வருகின்ற ஒமைக்ரான் பாதிப்பு உலகத்திற்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான்  ஆரம்ப காலகட்டத்தில் சற்று மெல்ல மெல்லப் பரவியது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு வேகம் அதிகமாகவே உள்ளது. இதன் விளைவாக தற்போது 100 பேருக்கும் அதிகமாக இந்த ஒமைக்ரான்  பாதிப்பு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் 11 மாநிலங்களில் உள்ள 101 பேருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment