அம்மா சிலைக்கெல்லாம் தினமும் மாலை,மரியாதை பண்ண முடியாது!! ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு;

தமிழகத்தில் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டவர் ஜெயலலிதா. இவர் மக்களிடையே அம்மா என்று அழைக்கப்பட்டார். இவரின் சிலைக்கு பராமரிப்பு குறித்து பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா சிலை

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலை பராமரிப்பு தொடர்பான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு நடைமுறைப்படி, அரசு சார்பில் வைக்கப்படும் எந்த ஒரு சிலைக்கும் தினசரி மாலை அணிவிக்கப்பட்டது இல்லை. தலைவர்களின் பிறந்த நாள் அன்று மட்டுமே தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.

அதனால் தமிழக அரசு அமைக்கப்படும் சிலைகள் அனைத்தும் பொதுப்பணித் துறை மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அமைக்கப்படும் சிலைகளின் பராமரிப்பு பணியை எந்த ஒரு தனிநபர் மற்றும் அமைப்புகளிடம் வழங்கும் நடைமுறை இல்லை.

ஜெயலலிதா சிலையை அதிமுக சார்பில் பராமரிக்க அனுமதிக்குமாறு பன்னீர்செல்வம் கோரியுள்ளார். பொதுப்பணித்துறை சிலைகளை பராமரிக்கிறதால் பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment