Connect with us

நீங்க கேட்ட சின்னம் தரமுடியாது! என்னடா விஜய் மக்கள் இயக்கத்திற்கு வந்த சோதனை!!

vijay makkal iyakkam9.

தமிழகம்

நீங்க கேட்ட சின்னம் தரமுடியாது! என்னடா விஜய் மக்கள் இயக்கத்திற்கு வந்த சோதனை!!

நீங்க கேட்ட சின்னம் தரமுடியாது! என்னடா விஜய் மக்கள் இயக்கத்திற்கு வந்த சோதனை!!

எவரும் எதிர்பாராத விதமாக அமைந்திருந்தது ஊரக உள்ளாட்சி தேர்தல்.  தமிழகத்தில் அத்தனை வலிமையான கட்சிகள் இருந்தாலும் விஜய் மக்கள் இயக்கம், விஜயின் பெயரையும், புகைப்படத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு சுமார் 129 இடங்களில் வெற்றி பெற்று ஏனைய கட்சிகளை திரும்பிப்பார்க்க வைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் விஜயின் புகைப்படம், கொடி போன்றவற்றை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் விஜய் மக்கள் இயக்கம் கேட்டிருந்த ஆட்டோ சின்னம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியது. விஜய் மக்கள் இயக்கம் பதிவு செய்யப்படாத நிலையில் ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியது.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு சுழற்சியில் மட்டுமே முறையில் மட்டுமே சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top