குமரியில் பயங்கரம்! நடுரோட்டில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்..!!

கன்னியாகுமரி அடுத்த மூலச்சல் அருகே மனைவி அணிந்திருந்த உடை பிடிக்காததால் கணவன் நடுரோட்டில் மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அடுத்த தக்கலை பகுதியில் வசிப்பவர் ஜெபசீல். இவரது மகள் ஜெபபிரின்ஸா என்பவருக்கும் எபனேசன் என்பவரும் 12 வருடங்களுக்கு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று முதல்! ஆவின் நெய் விலை உயர்வு… எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் ஜெபபிரின்ஸா தன்னுடைய தந்தை வீட்டில் தங்கி அழகு நிலைய பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உடை அணிவதில் அடிக்கடி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையில் நேற்று நள்ளிரவு தன்னுடைய மனைவியை எபனேசன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெபபிரின்ஸாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை!

இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவ்வழியாக வந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.