Connect with us

ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியரை மோசமாகத் திட்டி அடித்த ஹோட்டல் உரிமையாளர்.. நியாயம் கேட்டு போராடும் ஊழியர்கள்!

Untitled 107

செய்திகள்

ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியரை மோசமாகத் திட்டி அடித்த ஹோட்டல் உரிமையாளர்.. நியாயம் கேட்டு போராடும் ஊழியர்கள்!

ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியரை மோசமாகத் திட்டி அடித்த ஹோட்டல் உரிமையாளர்.. நியாயம் கேட்டு போராடும் ஊழியர்கள்!

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு உணவு டெலிவரி ஆர்டர் எடுக்கச் சென்றுள்ளார் ஸ்விக்கி ஊழியர்.

அப்போது அந்த ஹோட்டலின் உரிமையாளருக்கும் ஸ்விக்கி ஊழியருக்கும் உணவு டெலிவரி எடுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஹோட்டல் உரிமையாளர் கோபத்தின் உச்சத்துக்குச் சென்று பொத்தாம் பொதுவாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் குறித்துத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மேலும் ஸ்விக்கி ஊழியர் வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கையும் உதைத்து தள்ளி சேதப்படுத்தியுள்ளார். அத்துடன் ஸ்விக்கி ஊழியரையும் அடித்துள்ளார்.

இந்த செய்தியினை அறிந்த பிற ஸ்விக்கி டெலிவரி மேன்களும் இதற்கான நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக ஸ்விக்கி ஊழியர்கள் சென்னையை அடுத்த ஓல்டு மகாபலுபுரம் பகுதியில் பலர் ஒன்றாக இணைந்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாக பொதுமக்கள் ஸ்விக்கி ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

மேலும் ஹோட்டல் உரிமையாளருக்குத் தக்க தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top