கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸானது நம்மைப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருகின்றது.
2019 ஆம் ஆண்டு உருவான இந்த வைரஸ் கொரோனா, ஒமிக்ரான், ப்ளோரோனா, மேலும் இந்த வைரஸ்களின் மாறுபாடுகள் எனப் பல வைரஸ்களை நாம் பார்த்துவிட்டோம்.
உருமாறிய வைரஸ்கள் மக்களைப் பெரிய அளவில் தொடர்ந்து பாதிக்கின்றது. அந்தவகையில் தற்போது உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. வைரஸ் உருமாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது இந்த வைரஸானது நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முந்தைய எச்.ஐ.வி. வைரஸ்களைக் காட்டிலும் இந்த உருமாறிய வைரஸின் பாதிப்பு மிகவும் கொடியதாக இருக்கும் என்று கண்டுபிடிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த எச்.ஐ.வி. வைரஸ் மற்ற வைரஸ் நோயால் பாதித்தவர்களை 5.5 மடங்கு அதிகளவில் பாதிக்கும் என்றும், இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பெரிதாக பதம் பார்க்கும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த வி.பி. மாறுபாடு வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 109 பேர் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த வி.பி.மாறுபாடு வைரஸிற்கும் நார்மலான எச்.ஐ.வி வைரஸ் தொற்றுபோலவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்து உள்ளனர்.