தனுஷ் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இந்து அமைப்பினர்……!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் அட்ராங்கி ரே என்ற ஹந்தி படம் வெளியானது. இப்படத்தை தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் தனுஷ் தவிர பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கலாட்டா கல்யாணம்கலாட்டா கல்யாணம்

ராஞ்சனா படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் ஆன்ந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அட்ராங்கி ரே படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 24ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ஓடிடிடில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையையும் பெற்றது.

கலாட்டா கல்யாணம்

மேலும் படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் படத்திற்கு எதிராக இந்துக்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதாவது அட்ராங்கி ரே படத்தில் லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாகவும், இந்து தெய்வங்களை கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி இந்து அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதுதவிர படத்தை புறக்கணிக்க வேண்டும் என கூறி டிவிட்டரில் #Boycott_Atrangi_Re என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டிங்கில் முதல் இடத்தில் வைத்துள்ளனர். தனுஷ் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள சம்பவம் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அட்ராங்கி ரே

என்னதான் படத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும் மற்றொரு புறம் அட்ராங்கி ரே படத்திற்கு ஆதரவாக சில குரல்களும் எழுந்துள்ளன. படங்களை வெறும் படமாக மட்டும் பார்க்காமல் அதை அரசியலாக்குவது சரியான வழி அல்ல. கலப்பு திருமணங்களை எப்போதும் ஆதரிப்போம் என சிலர் ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment