காலையில் உயர்ந்த தங்கம் மீண்டும் சாயங்காலத்தில் ஜெட் வேகத்தில் பயணம்! எவ்வளவு தெரியுமா?

இன்று காலை பலருக்கும் ஆச்சரியம் அளிப்பதாக தங்கத்தின் விலையில் இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதன் விளைவாகவே தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 650 உயர்ந்து விட்டதாக காணப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5055 விற்பனை செய்யப்பட்டது.

அதேவேளையில் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 40 ஆயிரத்து 440 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூபாய் 808 விலை உயர்ந்ததாக காணப்படுகிறது. இதனால் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 5071, ஒரு சவரன் ரூபாய் 40 ஆயிரத்து 568 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 75.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும் வாங்குபவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment