
பொழுதுபோக்கு
சிவகார்த்திகேயன் 22 வது படத்தின் ஹீரோயின் யாரு தெரியுமா?
தமிழ் சினிமாவின்முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டான்’. டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்தது,அதை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே.20 படம் பிரின்ஸ்.
சிவகார்த்திகேயனுக்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் முதல் படம் இதுதான். அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் நடிக்க இருக்கிறார். கமல் தயாரிப்பில் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கையுள்ளார்.படத்தில் சாய்பல்லவி ஜோடியாக நடிக்க உள்ளார்.
அதை தொடர்ந்து மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி நடிக்க யுள்ளார்.தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் அறிமுகமானவரான கிர்த்தி ஷெட்டி.
தமிழ் இயக்குனரான லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இடம் பெற்ற ‘புல்லட்’ பாடல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இவரது நாடனத்தில் மிகவும் வைரலானது.இந்தப் பாடல் யு டியூபில் தமிழில் 57 மில்லியன் தெலுங்கில் 73 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
சிபி சத்யராஜ் நடிக்கும் மாயோன் 2 அப்டேட்!
மேலும் தமிழில் சூர்யாவின் 41வது படத்தில் கிர்த்தி ஷெட்டி நடிக்கயுள்ளார், முன்னதாக கிர்த்தி ஷெட்டி ஒரு பேட்டியில் தமிழ் நடிகர் விஜய் அவர்களுடன் நடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தது கிறிப்பிடத்தக்கது.
