சைலண்டாக திருமணத்தை முடித்த ‘குட் நைட்’ பட கதாநாயகி… இன்ஸ்டாவில் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்தார்…

ஊட்டியை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகை மீதா ரகுநாத். 2022 ஆம் ஆடு ஓடிடியில் வெளியான ‘முதலும் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். கிஷன் தாஸ் இப்படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். பள்ளி மாணவி மற்றும் திருமணத்திற்கு தயாராகும் இளம்பெண் என இரு வேடங்களில் நடித்திருந்தார். தனது இயல்பான நடிப்பால் இளைஞர்களைக் கவர்ந்தார். இந்த திரைப்படத்திற்காக நடந்த ஆடிஷனுக்கு 3000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். முதல் படமே அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது.

இரண்டாவதாக கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘குட் நைட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் கதாநாயகன் ஜெயபீம் திரைப்பட புகழ் மணிகண்டன் ஆவார். மீதா ரகுநாத் மற்றும் மணிகண்டனின் யதார்த்தமான நடிப்பு இப்படத்திற்கு மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது. இத்திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இவரின் நடிப்பிற்கு பாராட்டும் கிடைத்தது.

இதற்கிடையில் ஜீ 5 ல் ஒளிபரப்பான பைவ், சிக்ஸ், செவன், எய்ட் என்ற தொடரிலும் நடித்திருந்தார் மீதா ரகுநாத். பொருளாதார ரீதியாக பின்தங்கிய நடன கலைஞர்களாக மாறிய நடுத்தர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த தொடராகும்.

இரண்டு படங்களில் மட்டும் நடித்திருந்த மீதா ரகுநாத்தின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இந்நிலையில் அவருக்கு தற்போது பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் முடித்துள்ளது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் மீதா ரகுநாத்.

அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் என்ன இது எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் சைலண்டாக திருமணத்தை முடித்து விட்டாரே என்று கூறி வருவதுடன் மீதா ரகுநாத்தின் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.