கோலாகலமாக தொடங்கியது கொம்புவச்ச சிங்கத்தின் வீர விளையாட்டு! 38 பேர் படுகாயம்….

தமிழர்கள் பெயருக்கு மட்டும் அல்லாமல் செயலிலும் வீரர்கள் ஆகவே காணப்பட்டனர். அவர்கள் பொழுதுபோக்காக விளையாடும் விளையாட்டுகள் அனைத்துமே வீர விளையாட்டாகவே காணப்பட்டது. அதிலும் குறிப்பாக இன்று வரைக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீர விளையாட்டாக காணப்படுகிறது.

ஜல்லிக்கட்டு

இந்த நிலையில் இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் முன்கூட்டியே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிவிட்டது,

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கோலாகலமாக சீறி பாய்ந்து காளைகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்த தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 520 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்தாலே அங்கு வீரர்களுக்கு படு காயம் ஏற்படும் அந்த வரிசையில் தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில்  முப்பத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அதில் நாலு பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment