காந்தியை சுட்டுக்கொலை செய்தவரின் வாரிசுக்கு இந்திய மண்ணில் இடமில்லை….!:ஸ்டாலின்
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரத்திற்கு மிக முக்கிய காரணமானவர் மகாத்மா காந்தியடிகள் தான். உலக நாடுகள் விடுதலைக்காக போராட்டம் நடத்தி கொண்டிருந்த நிலையில் இந்தியா மட்டும்தான் விடுதலையை அகிம்சை முறையில் பெற்றது.
இதனால் காந்தி தேசத் தந்தை என்றும் அனைவரும் அழைக்கின்றனர். இத்தகைய விடுதலை பெற்றுத்தந்த மகாத்மா காந்தியடிகளை 1948ஆம் ஆண்டு கோட்சே என்பவர் சுட்டுக் கொண்டார். ஜனவரி 30ஆம் தேதி இன்றைய நாள் அன்றுதான் மகாத்மா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 30-ஆம் தேதி காந்தியடிகளின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வரிசையாக தலைவர்கள், காந்தியடிகளின் நினைவு நாளை ஒட்டி தங்களது கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதன்படி கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களின் தீய எண்ணங்களுக்கும் இந்திய மண்ணில் இடமில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். காந்தியடிகளின் நினைவு நாளில் அன்பும், சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மகாத்மா காந்தியடிகளின் 75 நினைவு நாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.
