Connect with us

வெளுத்து வாங்கிய கனமழை… வெள்ளக்காடாய் மாறிய அரசு மருத்துவமனை!

rasipuram hospital

தமிழகம்

வெளுத்து வாங்கிய கனமழை… வெள்ளக்காடாய் மாறிய அரசு மருத்துவமனை!

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நான்கு வார்டுகளில் மூன்று அடிக்கு தண்ணீர்; அங்கிருந்த 49 உள் நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு மாற்றம். அதிகாரிகள் மூலமாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது – ராசிபுரத்தில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் பேட்டி.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று, 20 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் அதிக அளவில் ராசிபுரம் தாலுகாவில் பெய்தது. இதனால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள நான்கு வார்டுகளில் தண்ணீர் புகுந்ததால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அதில், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு, 54 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்தது. இதில், 20 சென்டிமீட்டர் மழை ராசிபுரம் தாலுகாவில் பெய்தது. அதிக அளவில் மழை பெய்ததன் காரணமாக, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குள் உள்ள பழைய கட்டிடங்களில், ஆண்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஐஸ்லேஷன் வார்டு என நான்கு வார்டுகளில் தண்ணீர் புகுந்தது.

சுமார் 2 அடி முதல் மூன்று அடி வரைக்கும் தண்ணீர் இருந்தது. தற்போது அதனை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. உள்நோயாளிகளாக இருந்த, 49 பேர் மற்ற வார்டுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு கனமழை பெய்த போது இதே நிலை நீடித்தது.

ராசிபுரம் நகராட்சி சார்பில் ஸ்டோமோட்டர் ரெயின் புதிதாக அமைத்து வருகின்றனர். மேலும், 2BHP பம்ப் மூலமாக தண்ணீர் வெளியேற்றப்படும் என கூறி இருக்கின்றனர். இந்த இரண்டும் இங்கு அமைக்கப்பட்டால் இந்த பிரச்சனை இருக்காது. ராசிபுரம் அரசு மருத்துவமனை புதிதாக கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு (ப்ரோபோசல்) அப்ரூவல் ஆகியுள்ளது. அதன் பிறகு, இந்த பிரச்சனை முழுவதும் தீர்க்கப்படும்.

இருந்தாலும், வரக்கூடிய மழைக்கு பிரச்சனை இருக்கக் கூடாது என்பதற்காக ஸ்டோமோட்டட் ரெயின் கட்டி அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top