Connect with us

சுற்றுலாவாசிகளை ஏமாற்றிய மழை? முக்கிய அருவிகளில் குளிக்க தடை.!!

cuttralam

தமிழகம்

சுற்றுலாவாசிகளை ஏமாற்றிய மழை? முக்கிய அருவிகளில் குளிக்க தடை.!!

பொதுவாக மே மாதத்தில் நம் தமிழகம் எங்கும் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கும். இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்பநிலையும் அதிகமாக காணப்படும். ஆனால் நடப்பாண்டில் அந்தளவிற்கு வெயிலின் தாக்கம் இல்லை.

ஏனென்றால் தொடர்ந்து நம் தமிழகத்தில் மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் இந்த மழையானது அடுத்த ஐந்து நாள் வரை நீடிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த சில நாட்களாக சுற்றுலாவாசிகள் மிகுந்த சந்தோஷத்தோடு அருவிகளில் நீராடினர்.

இந்த நிலையில் அந்த அருவிகளில் குளிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் நீர்வரத்து அதிகரிப்பால் திற்பரப்பு அருவியில் ஒரு பகுதியில் குறித்த பேரூராட்சி தடை விதித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top