
Tamil Nadu
ரொம்ப நாளுக்கு அப்புறம் சதமடித்த வெயில்…!! அதுவும் 14 இடத்தில;
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இருப்பினும் கூட ஒரு சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்று சதமடித்து உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் அங்கு 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயிலின் அளவு பதிவாகியுள்ளது.
அந்த வரிசையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், கடலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
திருத்தணி, வேலூரில் தலா 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம், தஞ்சாவூர், திருச்சியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ஈரோடு, நாமக்கல், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் நிலவுகிறது. இந்த அக்னி நட்சத்திரம் மே 28-ஆம் தேதி வரை நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
