பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் அவரது உடல்நிலை குறித்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் என்பவர் திடீரென விபத்தில் சிக்கினார். அவரது உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
நடிகர் சாய்தரம் தேஜ் நேற்றிரவு பைக்கில் சென்று கொண்டிருந்த அவரது பைக்கை ஒரு ஆடம்பர கார் ஒன்று திடீரென உரசியதாகவும், இதன் காரணமாக அவர் தடுமாறி கீழே விழுந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவருக்கு கை கால் முகம் வயிறு இடுப்பு உள்பட ஒரு சில இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரிய காயம் எதுவும் இல்லை கூறப்படுகிறது
இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சாய் தரம் தேஜ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான சாய் தரம் தேஜ் பிரபல நடிகர்கள் சிரஞ்சீவிம் பவன் கல்யாண் ஆகியவர்களின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது