சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் தலை மாயம் – பின்னணி என்ன?

செங்கல்பட்டு அருகே மின்கம்பம் சரிந்து விழுந்து புகைக்கப்பட்ட சிறுமியின் உடலில் இருந்து தலை மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்திரவாளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாண்டியம் – நதியா தம்பதியினர். இவர்களது மகள் கிருத்திகா அங்குள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இனி சிகரெட் பிடித்தல், மது அருந்தினால் நடவடிக்கை! – போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

இந்நிலையில் கடந்த 5 -ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தப்போது அவர் மீது மின்கம்பம் சரிந்து விழுந்தது. இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் தங்களது மகள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு அதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே போலீஸாருக்கு பெற்றோர் தகவல் கொடுத்த நிலையில் சிறுமியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்தனர்.

கோயில்களுக்குள் யாகங்கள் நடத்த கூடாது – ஐகோர்ட் கிளை அதிரடி!!

அப்போது சிறுமியின் தலையை மட்டும் துண்டித்து எடுத்து சென்றது தெரியவந்தது. இது நரபலி கும்பல் கைவரிசையா? அல்லது மண்டை ஓடு விற்கும் கும்பலா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment