Connect with us

“ஹஜ் புனித யாத்திரை” சென்னை விமான நிலையத்தின் பெயரையும் சேர்க்க வேண்டும்!! முதலமைச்சர் கடிதம்;

ஹஜ் பயணம்

News

“ஹஜ் புனித யாத்திரை” சென்னை விமான நிலையத்தின் பெயரையும் சேர்க்க வேண்டும்!! முதலமைச்சர் கடிதம்;

“ஹஜ் புனித யாத்திரை” சென்னை விமான நிலையத்தின் பெயரையும் சேர்க்க வேண்டும்!! முதலமைச்சர் கடிதம்;

இஸ்லாமியர்களின் புனித பயணமாக காணப்படுவது ஹஜ் பயணம். இந்த முறை ஹஜ் பயணத்திற்கு நம் தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள், கேரளா அல்லது பெங்களூருவில் உள்ள விமான நிலையத்தில் சென்று பயணிக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்காக தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி ஹஜ் பயணம் மேற்கொள்வோர் சென்னையிலிருந்து செல்ல மீண்டும் அனுமதி வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் கொச்சியிலிருந்து செல்ல வேண்டியிருப்பதால் சிரமத்துடன் கூடிய செலவும் ஏற்படும் என்பதை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலால் ஹஜ் பயணம் புறப்படும் இடத்தை கொச்சிக்கு மாற்றியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top