5 வகை உணவுடன் கோலாகலமாக வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய காவலர்….

எல்லாருமே வீடுகள்ல செல்லப்பிராணிகள் வளர்ப்பது சகஜம் தான். பலர் அதிகபட்சமாக செல்லப்பிராணிகள் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைப்பாங்க. ஆனா சிலர் மட்டும் தான் செல்லப்பிராணிகளையும் அவங்க வீட்ல ஒரு உறுப்பினரா நினைச்சு வளர்ப்பாங்க. அப்படி ஒரு படத்தில் சுவாரஸ்யமான சம்பவத்தை பத்தி தான் இப்போ பார்க்க போறோம்.

மதுரையில காவல் உதவி ஆய்வாளரா பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் அவருடைய வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தியுள்ளார் என்றால் அவர் அந்த நாய் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த காவலர் சக்திவேல் கடந்த 3 ஆண்டுகளாக அவரது வீட்டில் டாபர் மேன் வகையை பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்நாய்க்கு சுஜி என பெயரிட்டு மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சுஜி கர்ப்பம் தரித்துள்ளது.

இதனையடுத்து பெற்ற மகளுக்கு வளைகாப்பு செய்து மகிழ்விப்பது போல கர்ப்பம் தரித்த சுஜிக்கு சக்திவேலும், அவரது குடும்பமும் இணைந்து வளைகாப்பு நடத்தியுள்ளனர். அதுவும் சாதாரணமாக அல்ல 10 ஆயிரம் ரூபாய் செலவில் தடபுடலாக 5 வகை உணவுடன் வளைகாப்பு நிகழ்ச்சியை சக்திவேல் நடத்தி உள்ளார்.

மதுரை வீரத்துக்கு மட்டும் பெயர் போனது அல்ல பாசத்துக்கும் பெயர் போன ஊர் தான் என்பது அவ்வபோது வெளியாகும் இதுபோன்ற செய்திகள் மூலம் நிரூபனமாகி வருகிறது. வளர்ப்பு நாய்க்காக இவ்வளவு செலவு செய்து காவலர் ஒருவர் வளைகாப்பு நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment