Connect with us

2- ஆம் உலகப் போருக்குப்பின் மிகப்பெரிய பச்சைப் படுகொலை!! – ஜெலன்ஸ்கி ஆவேசம்..

202202251222332754 Tamil News Tamil News Ukraine President Vows To Stay In Kyiv As Russian SECVPF

Tamil Nadu

2- ஆம் உலகப் போருக்குப்பின் மிகப்பெரிய பச்சைப் படுகொலை!! – ஜெலன்ஸ்கி ஆவேசம்..

2- ஆம் உலகப் போருக்குப்பின் மிகப்பெரிய பச்சைப் படுகொலை!! – ஜெலன்ஸ்கி ஆவேசம்..

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு  பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.

ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது குண்டு மழை பெய்தது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சூழலில் ஐ.நா,வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொளி   காட்சி   மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது.

உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்யா ராணுவத்தால் 400 அப்பாவி பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் , காரில் பயணித்தவர்களை பீரங்கிகளை வைத்து உயிரோடு நசுக்கப்பட்டது இருப்பது உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக கூறினார்.

இதனையடுத்து  புச்சா நகரில் மனித உடல்கள் சிதறி கிடந்ததாகவும் 2 ஆம் உலக போருக்கு பிறகு ரஷ்யா மிகப்பெரிய பச்சை படுகொலை குற்றத்திற்கு ரஷ்ய ஆளாகி இருப்பதாக அவர் கூறினார்.

மேலும், தற்போது நிலவி வரும் போரினை தடுத்து நிறுத்த தவரிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் இல்லையெனில் ஐ.நா.அவையை இழுத்தி மூடிவிடுங்கள்  என ஆவேசமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top