தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தனுஷ் . இவர் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்’. இந்த படத்தில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் ‘தி கிரே மேன்’ படத்தை இயக்கியுள்ளனர்.
இதனிடையே கடந்த 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி இப்படம் பிரமாண்ட பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் ‘தி கிரே மேன்’ படத்தின் வெற்றையை தொடர்ந்து இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர போகிறது என நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .