Connect with us

‘தி கிரே மேன் 2’ – பாலிவுட்டில் மீண்டும் தனுஷ்! வைரலான ஆடியோ!

the gray man2

பொழுதுபோக்கு

‘தி கிரே மேன் 2’ – பாலிவுட்டில் மீண்டும் தனுஷ்! வைரலான ஆடியோ!

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தி கிரே மேன்’. இந்த படத்தில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் ‘தி கிரே மேன்’ படத்தை இயக்கியுள்ளனர். கடந்த 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி இப்படம் பிரமாண்ட பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியானது, ‘தி கிரே மேன்’ படத்திற்கு நடிகர் தனுஷ் அமெரிக்க டாலர்களில் 5 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.4 கோடியாகும்.

1727804 dhanush3

படத்தில் சியரா சிக்ஸைக் கொல்ல நியமிக்கப்பட்ட அவிக் சான்ஸ் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். அவர் ஒரு கொலையாளி, தடுக்க முடியாதவர், ஆனால் கொள்கையற்றவர் அல்ல. சியரா சிக்ஸை நிறுத்துவதற்கான வேலையை அவர் ஏற்றுக்கொள்கிறார்,தி கிரே மேன் படத்தில் அவிக் சானாக நடித்த தனுஷுக்கு மறக்கமுடியாத அனுபவம் இருப்பது போல் தெரிகிறது.

இந்த நிலையில் ‘தி கிரே மேன்’ பட இரண்டாம் பாகத்தை அதன் இயக்குநர்களான ருசோ பிரதர்ஸ் அறிவித்தனர். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இடம்பெறுவாரா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

794342 5a

இந்தியன் 2 ல் விவேக்கிற்கு பதில் நடிக்க போவது யாரு தெரியுமா? செம அப்டேட் ஆ இருக்குமே!

அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் தனுஷ் ஆடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ”தி கிரே மேன் உலகம் பெரிதாகிறது. இரண்டாம் பாகம் தயாராகிறது. லோன் வோல்ஃப் தயார். நீங்கள்?” என குறிப்பிட்டுள்ளார். அதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவரது பதிவைப் பகிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top