ஆளுநர் பதவி ஒரு பயர்என்ஜின் வண்டி தான்! ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்பட மாட்டார்!!

தற்போது நம் தமிழகத்தில் ஆளுநராக உள்ளார் ஆர் என் ரவி. அவர் ஆளுநர் ஆனதற்கு தமிழகத்தில் முதலில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும் தற்போது நம் தமிழகத்தில் அவரே ஆளுநராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.பீட்டர் அல்போன்ஸ்

இந்நிலையில் ஆளுநர் ஆர் என் ரவியை குறித்து சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டியளித்துள்ளார். அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வரம்பை மீறினால் அதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பயப்பட மாட்டார் என்று கூறியுள்ளார் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.

இவற்றை தஞ்சாவூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்தார். அதன்படி அதிகாரிகளை அழைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது இரண்டு அரசுகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிடுவது அவசியம் இல்லை என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார். கடந்த ஆட்சியின்போது திமுகவின் எதிர்ப்பு காரணமாக ஆளுநர் பன்வாரிலால் தனது ஆய்வை நிறுத்தினார்.

ஆளுநர் பதவி என்பது ஒரு தீயணைப்பு இயந்திரம் போன்றது தான் நெருப்பு இருந்தால்தான் மட்டுமே தீயை அணைக்க வரவேண்டும் என்று கூறியுள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment