ஆளுநர் பதவி விலகவேண்டும்! நீட் தேர்வுக்கு முழு பொறுப்பு ஆளுநர் தான்: டி.ஆர்.பாலு

இன்று காலை கலைவாணர் அரங்கத்தில் தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்முறையாக தமிழகத்தின் ஆளுநர் ரவி உரையாற்றினார். அவர் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து இருந்தார். அதோடு மட்டுமில்லாமல் முதல் அமைச்சர்  ஸ்டாலினையும் அவர் வெகுவாக பாராட்டி வந்தார்.

இந்த நிலையில் அவர் நீட் மசோதா விளக்கம் பற்றி பேசுவார் என்று ஆளும் கட்சி மட்டுமின்றி அனைத்துக் கட்சியினரும் எதிர்பார்த்து இருந்தனர். நீட் மசோதா விலக்கு அளிக்காததால் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று காலை அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் திமுக எம்.பி  டி.ஆர்.பாலு ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு உள்துறை அமைச்சகம் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக அனைத்து கட்சி எம்பி களை சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் டி.ஆர்.பாலு கூறினார்.

நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதா தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க மூன்றாவது முறையாக அனுமதி ரத்து ஆனது ஆக டி.ஆர்.பாலு கூறினார். தமிழக அனைத்து கட்சிகளை அரசியல் காரணமாக அமித்ஷா சந்திக்க மறுப்பதாக நினைக்கிறேன் என்றும் டி.ஆர். பாலு கூறினார்.

நீட் தேர்வுக்கு முழு பொறுப்பு ஆளுநர் தான் இது தொடர்பாக மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷாவை கடந்த 29ஆம் தேதி சந்திக்கச் சென்றோம் என்றும் டி.ஆர்.பாலு கூறினார். நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரி உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளதாக பாலு கூறியுள்ளார். குடியரசுத் தலைவரிடம் அளித்த கோரிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை கடிதம் வந்தது என்றும் டி.ஆர்.பாலு கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment