கோப்புகள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் தேவை! சபாநாயகர் வலியுறுத்தல்;

நான் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆளும் கட்சியின் எம்எல்ஏ தான் சட்டப்பேரவையில் சபாநாயகராக நியமிக்க வேண்டும். அதன்படி ஆளுங்கட்சியின் திமுக எம்எல்ஏ அப்பாவு எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் ஒருமனதோடு சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்பாவு

அவர் தற்போது கோப்புகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலம் தேவை என்று கூறியுள்ளார். அதன்படி சட்டமன்றம் அனுப்பக்கூடிய கோப்புகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் கூட்டத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல் செய்துள்ளார்.

கோப்புகள் மீது ஆளுநர்கள் முடிவு எடுக்காமல் இருப்பது விவாதத்திற்கு உரியதாக இருக்கிறது என்றும் மாநில சட்டமன்ற சபாநாயகர் கூட்டத்தில் அப்பாவு பேசியுள்ளார். சட்டமன்றம் அனுப்பும் கோப்புகளை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனே அனுப்பும் மரபு தற்போது மீறப்படுகிறது என்றும் தமிழக சபாநாயகர் அப்பாவு கூறினார்.

எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது உள்ளிட்டவை சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் தமிழக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment