எதிர்பார்ப்புக்கேற்ப ஆளுநர் உரை உள்ளதா? ஆராய்ந்தால் வெறும் பூஜ்ஜியம் தான்: ஓபிஎஸ்

இன்று காலை 2022ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இவை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ரவி உரை கூறினார். அதில் பல புதிய திட்டங்கள் பற்றியும் ஆளுநர் ரவி கூறினார். அதோடு மட்டுமில்லாமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.

இந்த கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளிநடப்பு செய்தது. இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்துள்ளார்.

அதன்படி மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏதுவாக ஆளுநர் உரை உள்ளதா? என்று ஆராய்ந்து பார்த்தால் அதில் பூஜ்ஜியம் தான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மழை வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு ரூபாய் 6030 கோடி இழப்பீடு அறிவிப்பாகவே உள்ளது.

ஆனால் தற்போது வரை விவசாயிகளை அந்த இழப்பீட்டு தொகை சென்றடைய வில்லை என்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் மகளிர் உரிமை போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நீட் மசோதா விலக்கு அளிக்காததால் வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment