Connect with us

தேநீர் விருந்தை புறக்கணித்ததன் விளைவு!! நீட் விலக்கு மசோதா-ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநர் முடிவு?

neet cancle

செய்திகள்

தேநீர் விருந்தை புறக்கணித்ததன் விளைவு!! நீட் விலக்கு மசோதா-ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநர் முடிவு?

தேநீர் விருந்தை புறக்கணித்ததன் விளைவு!! நீட் விலக்கு மசோதா-ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநர் முடிவு?

நம் தமிழகத்தில் பலரும் எதிர்த்துப் போராடுவது நீட் தேர்வுக்கு தான். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்தடுத்து நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அளிக்கும் போது அதனை ஆளுநர் நிராகரிப்பதாக தெரிகிறது.

இருப்பினும் அயராது நம் தமிழக அரசு சட்டப்பேரவையில் மீண்டும் மீண்டும் கூட்டத்தொடரை ஏற்படுத்தி ஒருமனதாக நீட் விலக்கு மசோதா தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர்  ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாததால் தமிழ் புத்தாண்டு அன்று மாலையில் ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது.

தமிழக அரசு புறக்கணித்த நிலையில் ஆளுநர் இத்தகைய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பேரவையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top