இன்னுயிர் காப்போம் திட்டம்: விபத்தில் சிக்கியவர்களின் முதல் 48 மணி நேர சிகிச்சை செலவை அரசே ஏற்கும்!-ஸ்டாலின்

தினந்தோறும் நம் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. பல சாலை விபத்திற்கு வாகன ஓட்டியின் கவனமின்மை காரணமாக அமைகிறது. இவை பெரும் உயிரிழப்பையும் பல நேரங்களில் ஏற்படுத்தும். இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்கள் உயிரை காக்கும் ஒரு அற்புதமான திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இன்னுயிர் காப்போம் திட்டம்

அதன்படி தமிழகத்தில் 38 மாவட்டங்களில் இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவை 48 மணி நேரத்துக்கு தமிழக அரசு ஏற்கும் என்றும் கூறினார் ஸ்டாலின்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் இன்னுயிர்  காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். விபத்துகளை பொருத்தவரை இந்திய அளவில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலமாக நம் தமிழ்நாடு உள்ளது மிகுந்த வருத்தத்தை தருகிறது என்றும் கூறினார்.

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. துரிதமான செயல்பாடு தான் மாபெரும் உயிர்களை காப்பாற்றுகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேர சிகிச்சை செலவை தமிழக அரசு ஏற்கும் என்றும் கூறினார்.

உயிர் காக்கும் அவசர சிகிச்சை பெரும்பாலும் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் தான் தேவைப்படுகிறது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். 201 அரசு மருத்துவமனைகள், 408 தனியார் மருத்துவமனைகளிலும் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். காப்பீட்டு திட்டம் அட்டை உள்ளோர், இல்லாதோர், வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினருக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment