நாளை போராட்டம் அறிவித்த எதிர்க்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த அரசுகொடுத்த அரசு! முழு ஊரடங்கு அமல்;

கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக கடந்த வாரம் முதல் இலங்கையில் வாழும் மக்கள் கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபட்ட தொடங்கினர்.

அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைய முயற்சித்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பல்வேறு விதமான அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இலங்கையில் நாளைய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இலங்கையில் வரும் திங்கள்கிழமை காலை 6 மணி வரை அறிவிக்கப்பட்ட அமலுக்கு வந்தது.

இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாளை போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளை தினம் இலங்கை அரசை கண்டித்து போராட்டம் அறிவித்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment