என்னங்க சார் உங்க சட்டம்; தமிழ்நாட்டுல மண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலை தரவேண்டும்!!

தமிழகத்தில் தற்போது பல அரசுத் துறைகளில் வடமாநிலத்தவர்கள் பணிபுரிகின்றனர். இது குறித்து அவ்வப்போது வழக்கு தொடரப்படும். அதன் வரிசையில் தற்போது வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஐகோர்ட் மதுரைதமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்க அரசாணை வெளியிட உத்தரவிட கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அரசாணை  வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் சோழசூரர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரயில்வேயில் பயிற்சியாளர்களாக சேர்ந்த 1,600 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பல மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வேலைவாய்ப்பில் அந்த மாநிலத்தின் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஆனால் நம் தமிழ்நாட்டில் மட்டும் தமிழர்களுக்கு அவ்வாறு வழங்கப்படவில்லை; இதனால் தமிழ்நாட்டிலும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். அதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சியை சேர்ந்த சோழசூரர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. குறிப்பிட்ட மாநிலத்துக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது சட்டவிரோதமாகாத? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பல மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை தர அரசாணைகள் உள்ளதாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் அதற்கு பதில் அளித்தார். எந்தெந்த மாநிலங்கள் முன்னுரிமை அளிக்கின்றன என்ற விவரத்தை தாக்கல் செய்ய அவகாசம் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment