பெட்ரோல் விலையை ஒன்றிய அரசு இன்னும் குறைக்க வேண்டும்!: ராஜஸ்தான் முதல்வர்;

இந்தியாவில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது பெட்ரோல் டீசல் விலை உயர்வு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெட்ரோல் டீசல் விலை வேறுபட்டு காணப்படுகிறது.

கெலோட்

இருப்பினும் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல்-டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள், மாநில அரசுகள் என பலரும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால்  சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை சற்று குறைவாக காணப்பட்டது. இதன் விளைவாக தற்போது சென்னையில் டீசல் விலை 100 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று முதல்வர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டுமென ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் வலியுறுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐந்து மாநில தேர்தல் நடந்து முடிந்த பிறகு பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கும் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர்   அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment