வடகிழக்கு பருவமழை! எல்லாத்துக்கும் அரசு ரெடியா இருக்க வேண்டும்:ஓபிஎஸ்!!

ஓபிஎஸ்

தமிழகத்தில் வடகிழக்கு  பருவமழை தொடங்க இன்னும் ஒரு வார காலம் தான் உள்ள நிலையில் தமிழக அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார் ஓ பன்னீர்செல்வம்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மேட்டூர் அணைஇந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்ததால் தமிழ்நாட்டில் உள்ள பெரிய அணைகளில் 80% நீர் நிரம்பி உள்ளது. 120 அடி ஆழமுள்ள மேட்டூர் அணையில் தற்போது 92 அடி வரை நீர் உள்ளது. அங்கு நீர் வரத்து 16 ஆயிரம் கன அடியாகவும் காணப்படுகிறது.இந்த வாரத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.

பவானிசாகர் அணையில் 92 சதவீத அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் 90% வரை நிரம்பியுள்ளன. அனைத்து அணைகளும் நிறைந்து, வடகிழக்கு பருவமழையும் துவங்கிவிட்டால் தாழ்வான பகுதிகளில் நிச்சயம் நீர் செல்லும் அபாயம் ஏற்படும்.

 தமிழக அரசுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கூறியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படுவோருக்கு உதவிகள் செய்ய முதலமைச்சர் உரிய ஆலோசனை அறிவுரை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print