Connect with us

நீங்கள் தமிழ்நாட்டு ஆளுநர்; தமிழ்நாட்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

kamalhassan

Tamil Nadu

நீங்கள் தமிழ்நாட்டு ஆளுநர்; தமிழ்நாட்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

நீங்கள் தமிழ்நாட்டு ஆளுநர்; தமிழ்நாட்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

தமிழகத்தில் மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது நீட் தேர்வு. நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசால் அனுப்பப்பட்டது. ஆனால் அதனை நிராகரித்து மீண்டும் தமிழக அரசுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு உள்ள இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்தனர்.

அதில் நீட் விலக்கு மசோதா பற்றி ஆளுநரிடம் எடுத்துக்கூற உள்ளதாகவும் காலையிலேயே தகவல் கிடைத்தது. இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தின் மக்கள் நீதி மய்யம் கட்சி கட்சித் தலைவர் கமலஹாசன் நீட் தேர்வில் தமிழக அரசுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்படி நீட் தேர்வு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது தொடர்பாக ஆளுநருடன் முதலமைச்சர் சந்தித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top