மக்களுக்கு தரமான பொருட்களை வழங்கும் முனைப்புடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில், இந்திய தர ஆணையத்தின் சார்பில் ஆவின் ஊழியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி முகாமை தலைமைச் செயலாளர் இறையன்பு தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய தலைமைச்செயலாளர் இறையன்பு, வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்குவதற்கு பொருளின் தரம், விலை, நிறம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட 4 அம்சங்கள் முக்கியமானவை. ஆனால் “ஆப்பிள்” போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் தனித்துவமாக இருப்பதால் விலை ஒரு பொருட்டாக இருக்காது என பேசினார்.
தரம் என்பது ஒவ்வொரு பொருளுக்கு வேறுபடும் நாம் பசுவிற்கு தரம் கொடுக்க முடியாது ஆனால் பாலிற்கு கொடுக்கலாம். தரம் என்பது முதலில் விற்கும் பொருள் எப்படி இருக்கும் என்பது அல்ல. விற்கும் கடைசி பொருள் தரத்தோடு இருக்கிறதா என்பது தான். மக்களுக்கு விழிப்புணர்வு தேவை அவை இருந்தால் தான் தனக்கு தரம் வேண்டும் என்பதில் சரியாக இருப்பார்கள் என கூறினார்.
ஒரு பொருள் குறைந்த தரத்துடன் அதிக விற்பனையிலோ அதிக விலையுடன் பல்வேறு நாடுகளில் இருப்பது உள்ளிட்டவை கடந்து அந்த பொருள் நாம் இருக்கும் இடத்தில் தரத்தோடு அளவான விலையில் உள்ளதா உள்ளது. நாம் நமது வாடிக்கையாளர்களை ஏமாற்ற கூடாது. முன்பை விட தற்போது வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு அரசு மக்களுக்கு நல்ல பொருள் தரத்தோடு வழங்குவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது என்றார்.