தமிழகத்தில் பறவைகள் சரணாலயமாக காணப்படுகிறது வேடந்தாங்கல். கடந்த ஆட்சியின் போது வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கும்படி முடிவெடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கும் முடிவை கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை 5 கிலோமீட்டர், சுற்றளவு 3 கிலோமீட்டர் சுற்றளவாக குறைக்க 2020ஆம் ஆண்டில் அதிமுக அரசு முடிவு செய்தது.
பரப்பளவை குறைக்க தேசிய வன உயிர் வாரியத்திடம் அதிமுக அரசு சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதிமுக அரசின் முடிவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தனியார் நிறுவனம் ஒன்றுக்காகவே அதிமுக அரசு சரணாலய பரப்பளவே குறைக்க முடிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்ப்பை அடுத்து தனியார் நிறுவனத்துக்கு அரசு உதவவில்லை என வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வனத்துறையின் தலைமை காட்டுயிர் பாதுகாவலர் சேகர் குமார் நிராஜ் ஏற்கனவே எடுத்த முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார். தேசிய வன உயிர் வாரியத்திடம் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை திரும்ப பெறவும் முடிவு செய்துள்ளது தமிழக அரசு.