ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது தமிழக அரசு;

நடக்க ஆரம்பித்த மனிதன் தற்போது பறக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து கொண்டு வருகிறது. உலகமெங்கும் விமானப் போக்குவரத்து சேவை அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்திலும் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகளும், விமான நிலையங்களும் அமைந்துள்ளன.

சென்னை விமான நிலையம்

அதன்படி சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை மற்றும் ஆகிய  பெருநகரங்களில் பன்னாட்டு  விமான நிலையங்கள் அமைந்துள்ளன. தூத்துக்குடி, சேலம் போன்ற பகுதிகளில் உள்நாட்டு விமான நிலையங்களும் அமைந்துள்ளன.

இதனால் தமிழகத்தில் இன்னும் புதிதாக விமான நிலையங்கள் வரலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான  பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை இன்று  தமிழக அரசு தொடங்கியுள்ளது.

ஓசூரில்  விமான நிலையம் அமைக்க சாத்தியமான இடங்களை ஆலோசகர்கள் தேர்வு செய்து வழங்கலாம் என்றும் கூறியுள்ளது. ஓசூரில் விமான போக்குவரத்துக்கு உகந்த இடம் மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட இடத்தை தேர்வு செய்து முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment