Connect with us

எல்லாவற்றையும் சந்திக்க அரசு ரெடியாக இருக்கிறது! இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக தான் இருக்கும்: மோடி பேட்டி

பிரதமர் மோடி

செய்திகள்

எல்லாவற்றையும் சந்திக்க அரசு ரெடியாக இருக்கிறது! இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக தான் இருக்கும்: மோடி பேட்டி

எல்லாவற்றையும் சந்திக்க அரசு ரெடியாக இருக்கிறது! இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக தான் இருக்கும்: மோடி பேட்டி

2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றைய தினம் தொடங்கி உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அனைத்துக் கட்சி எம்.பிகளும் கலந்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நரேந்திரமோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு பேட்டியளித்தார். அனைத்து எம்.பிகளையும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார். உறுப்பினர்களின் விவாதமும் இந்தியாவின் வளர்ச்சிக்கான தாகவே இருக்கும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நாடாளுமன்ற நடவடிக்கைகளை வெகுவாக பாதிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு திறந்த மனதுடன் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top