நீட் மூலம் மாநில சுயாட்சியை ஒன்றிய அரசு பறித்து விட்டது: சுப்பிரமணியன்

இன்று காலை தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நீட் மசோதா விலக்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 12 கட்சிகள் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். பாஜக மட்டும் நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நீட் மூலம் மாநில சுயாட்சியை ஒன்றிய அரசு பறித்து விட்டது என்று கூறியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலத்தின் சுயாட்சியை ஒன்றிய அரசு பறித்து விட்டது என்று மா. சுப்பிரமணியன் கூறினார்.

முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின்பு இதனை சுப்பிரமணியன் தெரிவித்தார். நீட்தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது என்றும் கூறினார். நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தில் இறையாண்மைக்கு எதிரானது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஆளுநரை முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது மசோதாவை ஒன்றிய அரசுக்கும் அனுப்புவதில் தாமதம் என்று ஆளுநர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார் அமைச்சர் சுப்பிரமணியன். தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பிகளை சந்திக்க மறுத்தது கண்டனத்துக்குரியது என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment