இனி மூன்று குழந்தைகள் பெற்று கொள்ளலாம்…. அனுமதி அளித்த அரசு…..

உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருப்பது சீனா தான். இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும். மீறினால் அரசு சலுகைகள் கிடைக்காது போன்ற சில அறிவிப்புகளை அந்நாட்டு அரசு வெளியிட்டது.

ஆனால் கொரோனா தாக்கம் உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறதாம். இதனை எப்படி சரிகட்டலாம் என யோசித்து வந்த சீன அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இனிமேல் தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல அப்படி மூன்று குழந்தைகள் பெற்று கொள்ளும் தம்பதிகளுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளையும் மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.

இது தவிர மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்று தம்பதிகளுக்கான விடுமுறையை அதிகரித்துள்ளது. மேலும் தற்போது இதற்கு ஆதரவான நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது அதனால் குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டாம் என கூறிய அதே அரசாங்கம் தற்போது மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment