Connect with us

ஊரடங்கு, அவசர நிலை பிரகடனம் எதற்காக? விளக்கம் கொடுத்த அரசு!

ஊரடங்கு

செய்திகள்

ஊரடங்கு, அவசர நிலை பிரகடனம் எதற்காக? விளக்கம் கொடுத்த அரசு!

ஊரடங்கு, அவசர நிலை பிரகடனம் எதற்காக? விளக்கம் கொடுத்த அரசு!

தற்போதைய இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாலை முதல் இலங்கையில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் இன்று எதிர்க்கட்சியினர் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெறாமல் உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து மனித உரிமை மீறல் என்றும் கருத்துக்கள் வெளிவந்தது. இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தவே அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசர நிலை பிரகடனம் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்று இலங்கை அரசு கூறியது. பொது சொத்துக்கள், தனியார் சொத்துக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.

மார்ச் 31 ஆம் தேதியில் ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு சிலரால் பொது சொத்துக்கள் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது. இலங்கையில் மூடப்பட்டிருந்த சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top