Connect with us

மூதாட்டியை கொலை செய்து நாடகமாடிய அரசு மருத்துவர் கைது!!

கொலை

தமிழகம்

மூதாட்டியை கொலை செய்து நாடகமாடிய அரசு மருத்துவர் கைது!!

நம் தமிழகத்தில் நாள்தோறும் விபத்துகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

இவை தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் பதிவாகி கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் விபத்தை காரணம் காட்டி கொலை செய்வதை மறைத்து நாடகமாடும் செயலும் அவ்வப்போது நடைபெறும்.

இது போன்று செய்தவர்கள் விசாரணையின் போது கைது செய்யப்படுவார்கள். அதன்படி தற்போது மருத்துவர் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கார் ஏற்றி மூதாட்டியை கொன்று நாடகமாடிய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவர் பிரபாகரன் பார்க்கிங் ஏரியாவில் இருந்து ரிவர்ஸில் காரை எடுக்கும் போது மூதாட்டி மீது மோதி உள்ளார். கார் மோதியதில் 73 வயதான லூசியா இறந்த நிலையில் வேறு எங்கோ விபத்து நடந்ததாக பிரபாகரன் கூறியுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மூதாட்டியை கொன்றது உறுதியானதால் பிரபாகரன் சிக்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top