Connect with us

சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

chennai day

தமிழகம்

சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

சென்னையில் அச்சரப்பாக்கம் முதல் அரக்கோணம் வரையில் சென்னை பெருநகர எல்லையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 3-ம் முழுமை திட்டம் தொலைநோக்கு ஆவணம் தயாரித்தலுக்கான கருத்தரங்கம் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைப்பெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் குறிப்பட்ட விஷயங்களை அமைச்சர்கள் பகிர்ந்தள்ளனர். அதில் 2006-ன் ஆண்டிற்கு பிறகு சென்னை மாநகரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கணக்கில் எடுத்தாகவும், நகரின் மக்கள் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

இதன் காரணமாக சென்னை நகரின் எல்லையை விரிவடைய செய்வதற்காக முயற்சிகள் எடுத்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதன் படி, அச்சரப்பாக்கம் முதல் அரக்கோணம் வரையில் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்தகைய திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து தொடர்ச்சியாக 3 வருடங்களுக்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த இருப்பதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top