
Tamil Nadu
தாறுமாறாக குறைந்தது தங்கத்தின் விலை!! அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்;
பொதுவாக ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிரந்தர விலை கூறலாம் ஆனால் தங்கத்திற்கு மற்றும் அவ்வாறு விலை நிர்ணயிக்க முடியாது. ஏன் என்றால் தங்கத்தின் விலை தினம் தோறும் மாறிக் கொண்டேதான் காணப்படும்.
அதுவும் குறிப்பாக ரசியா போருக்குப்பின் நம் இந்தியாவில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 40 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதுவும் அக்ஷய திருதி பின்பு தமிழகத்தில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்ததாக காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினமும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 300 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதால் வர்த்தகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 328 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 4805 க்கு விற்பனை ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து நானூற்று நாற்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 65.50க்கு விற்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
