Connect with us

சரமாரியாக சரிந்த சவரன் ரேட்.!! ஒரே கொண்டாட்டத்தில் இல்லதரசிகள்..!!

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

தமிழகம்

சரமாரியாக சரிந்த சவரன் ரேட்.!! ஒரே கொண்டாட்டத்தில் இல்லதரசிகள்..!!

பொதுவாக அனைத்து விதமான பொருள்களுக்கும் குறிப்பிட்ட விலையை நிர்ணயிக்கலாம். ஆனால் தங்கம் மற்றும் வெள்ளிக்கு விலையை நிர்ணயிக்க முடியாது. ஏனென்றால் தினந்தோறும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டே காணப்படும்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்ந்து இருந்தது. இதன் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.

அவர்களை மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தற்போது சவரன் விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.

இதனால் ஒரு சவரன் சென்னையில் 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4,805 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூபாய் 100 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் அங்கு ஒரு கிலோ வெள்ளி 66 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top