10 மடங்கிற்கு மேல் வருவாயை அதிகரிக்க இலக்கு..!! தூத்துக்குடியில் அசத்தல் அறிவிப்பு;
இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிக முக்கியமான நாளாக காணப்படுகிறது. முதலில் தூத்துக்குடி மாநகரில் உள்ள துறைமுகம் ரூபாய் 7500 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ரூபாய் 2,000 கோடியில் கடல் நீரை நன்னீராக்கும் ஆலை உருவாக்கப்பட உள்ள திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தூத்துக்குடி விமானநிலையம் ரூபாய் 350 கோடியில் நவீன கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு கடல் மற்றும் வான் வழி போக்குவரத்து தளங்கள் மேம்படுத்தப்பட்ட நிலையில் தரை வழிப் போக்குவரத்தை மேம்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தூத்துக்குடியில் இரண்டாவது சரக்கு ரயில் முனையமாக மீளவிட்டான் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது.
தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ரமேஷ் பிரபு பேட்டி அளித்தார். தூத்துக்குடி துறைமுகம் முதல் மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு சரக்குகளை கையாள 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு சரக்கு போக்குவரத்திற்கான வசதிகளை நிறைவேற்றவும் பணிகள் தீவிரம் செய்யபட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வருவாயை ரூபாய் 300 கோடியில் இருந்து ரூபாய் 4,070 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
