
தமிழகம்
சிறுமியின் கருமுட்டை விற்பனை-இரண்டு மருத்துவமனைகளுக்கு சம்மன்!!
கடந்த வாரம் இது தமிழகத்தில் பெரும் பரபரப்பான நிகழ்வு ஒன்று நடந்தது. அதுவும் ஈரோடு மாவட்டத்தில் தாய், தந்தை உள்ளிட்ட மூவர் சேர்ந்து சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கொடூரம் நிகழ்ந்தது.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் பல ஆண்டுகளாக இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவர்கள் அந்த சிறுமிக்கு 20 வயது ஆகி உள்ளது போல் எனக் காட்டி கரு முட்டை விற்பனை செய்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக இரண்டு மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சேலம், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் உரிய ஆவணங்களுடன் ஆஜராக ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
