குற்றாலத்தில் பயங்கரம்! அருவியில் தவறி விழுந்த சிறுமி… துரிதமாக செயல்பட்டு மீட்ட இளைஞர்!!

பழைய குற்றால அருவியில் பெற்றோருடன் குளிக்க வந்த இடத்தில் 100 அடி பள்ளத்தில் விழுந்து இழுத்து செல்லப்பட்ட கோவையை சேர்ந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

தமிழகம் – கேரள எல்லைப்பகுதியான பழைய குற்றால அருவியில் தொடர்ந்து 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டையடுத்து தற்போது நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன் ஒரு பகுதியாக ன்கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் பழைய குற்றால அருவிகளில் குளிக்க சென்றனர்.

அப்போது 4 வயது கவினி என்ற சிறுமி ஒருவர் நீரில் அழகை பார்த்து கொண்டிருந்தப்போது 100 அடி பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். பின்னர் பொதுமக்கள் கூச்சல் போட்டுள்ளனர்.

இந்த சூழலில் இளைஞர் ஒருவர் தனது உயிரை பொருட்படுத்தாமல் அருவியின் கீழே இறங்கி துரிதமாக செயல்பட்டு சிறுமியை காப்பாற்றி உள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டத்தை அடுத்து உடனடியாக தென்காசி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.