5 வயதிலேயே இரண்டு உலக சாதனை… சுடோகு போட்டியில் கலக்கும் சிறுமி…..

இன்றைய காலத்தில் குழந்தைகள் எல்லாம் மிகவும் திறைமைசாலியாகவும், அறிவாளிகளாகவும் விளங்குகிறார்கள். மிக இளம் வயதிலேயே நம்மால் நினைத்து பார்க்க முடியாத விஷயங்களையும் மிக எளிதாக செய்து முடித்து விடுகிறார்கள். இந்த வயதில் இவ்வளவு திறமையா என நாம் வியக்கும் அளவிற்கு அவர்களின் திறமை உள்ளது.

 

கோதை

தற்போது அப்படி திறமையான குழந்தையை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். சென்னையை சேர்ந்த பிரபு மற்றும் கௌசல்யா தம்பதிகளின் மகள் கோதை. தற்போது ஒன்றாம் வகுப்பு படித்து வரும் கோதை இந்த வயதிலேயே இரண்டு உலக சாதனை படைத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கோதை

சிறுவயது முதலே மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த கோதை ஐந்து வயதிலேயே சுடோகு விளையாட்டுகளை மிக சுலபமாக செய்து முடித்துள்ளார். இவரின் ஆர்வத்தை கண்ட கோதையின் பெற்றோர் ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை சிறுமிக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அதில் மிகுந்த ஆர்வம் கொண்ட கோதை யூடியூப் மூலம் நன்கு கற்று தேர்ந்துள்ளார்.

இதுதவிர கோதை ஹூலா ஹூபிங் எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டே டெட்ராஹெட்ரான் என்ற முக்கோண வடிவ ரூபிக் கனசதுரத்தை 6.88 நொடிக்குள் வரிசைப்படுத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அதன் மூலம் அவர் 18 வயது வாலிபர் 13.86 நொடியில் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இல்லைங்க மாஸ்டர் மார்பிக்ஸ் எனப்படும் மிகவும் கடினமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை ஹூலா ஹூபிங் செய்துகொண்டே 1 நிமிடம் 59 நொடிக்குள் கோதை செய்து முடித்துள்ளார். மெகாமின்க்ஸ் எனப்படும் 8 பக்க கனசதுரத்தை 3.3 நிமிடத்தில் செய்துமுடித்து இரு உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து சிறுமி கோதையை கெளரவப்படுத்தும் விதமாக தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த வயசுல இம்புட்டு திறமையா என அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment