Connect with us

செம்ம வைரல்! குடிபோதையில் காவலரை தாக்கிய இளம்பெண்..

an 1

News

செம்ம வைரல்! குடிபோதையில் காவலரை தாக்கிய இளம்பெண்..

சோசியல் மீடியாவில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்களில் ஒருசில வீடியோக்கல் மட்டும் தான் வைரலாகும். அந்த வகையில் இளம்பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே மும்பையில் இரவு நேரங்களில் அதிகமாக குற்றங்கள் நடைபெறுவதால் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது ஓலா வண்டியில் இருந்த இளம்பெண்கள் மது அருந்தி இருப்பதை கண்ட காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் மதுபோதையில் காவல்துறையினரின் தகாத வார்த்தைகளில் திட்டியதாக தெரிகிறது.

அதோடு போலீஸ் அதிகாரியை சீண்டி அவரின் தலை முடியை பிடித்து இழுத்து, எட்டி உதைக்க முயற்சி செய்வது போன்றும் அவர் மாஸ்கை கழற்றி அதனை கிழிக்க முயற்ச்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைப்பார்த்த அங்கிருந்த வாகன ஓட்டுநர்கள் அந்த பெண்ணின் அநாகரீகமான செயல்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top