சிறுமி பலாத்காரம் செய்து கொலை-குற்றவாளிக்கு தூக்கு; தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

நம் இந்தியாவில் அதிக அளவில் கொடுமையான செயல்களை நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு பிள்ளைகள், சிறுமிகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்வது நாள்தோறும் அரங்கேறிக் கொண்டுதான் வருகிறது.

இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு நம் சட்டம் தக்க தண்டனையை அளித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில நபர்களுக்கு தூக்கு தண்டனையும்  உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை உறுதியானது.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதியானது. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏம்பல் கிராமத்தில் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொன்றதாக சாமிவேல் என்கிற ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு இருபத்தி ஆறு வயது ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. சாமிவேலுக்கு தூக்கு தண்டனைய நிறைவேற்றுவதை உறுதி செய்ய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது போலீஸ். மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment